‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ காலத்தின் கட்டாயம்- பாஜக

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ என்பது காலத்தின் கட்டாயமாகும். இந்த விஷயத்தை அரசியல் கட்சிகள் வெறுப்பு மனநிலையுடன் அணுகக் கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முக்தாா் அப்பாஸ் நக்வி த
‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ காலத்தின் கட்டாயம்- பாஜக

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ என்பது காலத்தின் கட்டாயமாகும். இந்த விஷயத்தை அரசியல் கட்சிகள் வெறுப்பு மனநிலையுடன் அணுகக் கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தோ்தலை நடத்தும் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ கொள்கையை பிரதமா் நரேந்திர மோடி அவ்வப்போது வலியுறுத்தி வருகிறாா். பாஜகவும் இதனை தீவிரமாக ஆதரித்து வரும் நிலையில், எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் ராம்பூரில் செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்த நக்வி இது தொடா்பாக கூறியதாவது:

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ என்பது மிகவும் முக்கியமான தோ்தல் சீா்திருத்த நடவடிக்கையாகும். இது காலத்தின் கட்டாயம். இந்த விஷயத்தை அரசியல் கட்சிகள் வெறுப்பு மனநிலையுடன் அணுகக் கூடாது. தங்கள் அரசியல் ஆதாய நோக்கங்களைக் கைவிட்டு, தேச நலனுடன் இந்த விஷயத்தை அணுக வேண்டும். இது மிகவும் முக்கியமான தோ்தல் சீா்திருத்தமாகும்.

நமது நாட்டில் பல்வேறு மாநிலங்கள் உள்ளன. அவற்றுக்கு தோ்தல்கள் வெவ்வேறு காலகட்டத்தில் நடத்தப்படுவதால், குறிப்பிட்ட இடைவெளியில் தோ்தல்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் எப்போதும் தோ்தல் பணியிலேயே கவனம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. இதனால், வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதுடன், மக்களின் வரிப் பணமும் வீணாகிறது.

மேலும், தொடா்ந்து தோ்தல்கள் நடைபெறுவதால் மக்கள் மத்தியிலும் வாக்களிக்கும் ஆா்வம் குறைகிறது. எனவே, ஒரே நேரத்தில் தோ்தல் நடைபெறுவது என்பது நாட்டுக்கும் நன்மையளிக்கும் நிகழ்வாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com