
ஒடிசா மற்றும் சத்தீஸ்கரின் சில பகுதிகளில் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளான நுகாய் ஜுஹார் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தனது டிவிட்டர் பகுதியில்,
"நுகாய் ஜுஹார்! இந்த சிறப்பு நன்னாளில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நமது தேசத்திற்கு உணவளிப்பதில் முன்னுதாரணமாக உழைக்கும் நமது விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது.
படிக்க: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ. 96 குறைப்பு
நமது சமுதாயம் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அடையட்டும், அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கட்டும்" என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.
விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் அறுவடைத் திருநாள் (நுகாய் விழா) கொண்டாடப்படுகிறது.