
கேரளத்தில் உள்ள ஆதி சங்கரா பிறந்த கிராமமான கலாடிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
கேரளத்திற்கு புறப்படுவதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, துறவி ஆதி சங்கரா குறித்தும் அவரது பங்களிப்பு குறித்தும் நினைவு கூர்ந்தார்.
ஆதி சங்கரா அத்வைதா என்ற தத்துவத்தை முன்மொழிந்தார். அவரது இந்த அத்வைதா தத்துவத்தை கேரளத்தில் அவருக்குப் பிறகு பலரும் பின் தொடர்ந்தனர். ஆன்மிகத் தலைவர்கள் ஸ்ரீ நாரயண குரு, சட்டம்பி சுவாமிகள் மற்றும் அய்யன்காளி போன்றோர் அத்வைதா தத்துவத்தை பின்பற்றினர்.
இதையும் படிக்க: கார்த்தி சிதம்பரத்துடன் பாஜக தலைவர் அண்ணாமலை செல்ஃபி
பிரதமரின் கேரளப் பயணம் குறித்து பாஜக சார்பில் கூறியதாவது: “ ஆதி சங்கராவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக பெரியார் நதியில் அமைந்துள்ள அவர் பிறந்த கிராமமான கலாடிக்கு பிரதமர் சென்றுள்ளார்.” என்றனர்.