
வடக்கு ஆப்கானிஸ்தான் நகரான ஹெராத் நகரில் உள்ள ஒரு மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயர்மட்ட தலிபான் சார்பு மதகுரு மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
முஜிப் ரஹ்மான் அன்சாரி, அவரது காவலர்கள் சிலர் மற்றும் பொதுமக்கள் மசூதியை நோக்கிச் செல்லும் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் செய்தி தொடர்பாளர் மஹ்மூத் ரசோலி கூறினார்.
படிக்க: திருமண நாளை மறந்துபோகும் கணவர்களுக்கான செய்தி
இந்த குண்டுவெடிப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
சமீபத்திய மாதங்களில் ஆப்கனில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.