
கோப்புப்படம்
பெங்களூரு: உணவகங்களிலிருந்து உணவுகளை நேரடியாக இருப்பிடத்துக்கே கொண்டு வந்து சேர்க்கும் ஸ்விக்கி நிறுவனத்தின் மற்றொரு பிரிவான இன்ஸ்டாமார்ட் மூலமாக பொருள்கள் வாங்குவோர் கடுமையாக அதிகரித்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், புது தில்லி, சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் இன்ஸ்டாமார்ட் மூலமாக பொருள்களை வாங்குவோரின் எண்ணிக்கை 16 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் புள்ளிவிவரம் காட்டுகிறது.
இதையும் படிக்க.. பேருந்துகளில் ரயில்களைப் போல புதிய வசதி: பயணிகளின் திண்டாட்டத்துக்கு முடிவு
குறிப்பாக, ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்கள் வாங்குவோர் எண்ணிக்கை பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் அதிகரித்திருப்பதகாவும், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 290 டன் பச்சை மிளகாயை மக்கள் ஆர்டர் செய்து வாங்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இன்ஸ்டாமார்ட் செயலி மூலம் இதுவரை ஆர்கனிக் பழங்கள் மற்றும் கய்காறிகள் என 62,000 டன் அளவுக்கு மக்கள் வாங்கியிருப்பதாகவும், இது 58 மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பால், முட்டை போன்றவை பெங்களூரு, மும்பை, தில்லி மக்கள் அதிகம் வாங்கியுள்ளனர். இந்த நகரங்களில் வாங்கியதும் சாப்பிடக் கூடிய உணவுகளின் தேவைகளும் அதிகமாகவே இருந்துள்ளது.
இதையும் படிக்க.. திருமண நாளை மறந்துபோகும் கணவர்களுக்கான செய்தி
உணவு பொருள்களுக்கு இணையாக, கழிப்பறை சுத்திகரிப்பான், சுத்தம் செய்யும் நார்கள் போன்றவையும் 2 லட்சம் முறை வாங்கப்பட்டுள்ளது.
கோடைக் காலத்தில் ஐஸ்க்ரீம் வாங்குவது 42 முறையும் அதிகரித்துள்ளது. இது மட்டுமல்ல, துரித உணவான நூடுல்ஸ் மட்டும் 56 லட்சம் பாக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளன.