
சுங்கச் சாவடியில் நிற்காமல் தடுப்பை இடித்துச் செல்லும் மணல் டிராக்டர்களின் காணொலி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டம், மும்பை - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சையான் அருகே சுங்கச் சாவடி அமைந்துள்ளது. அந்த சுங்கச் சாவடிக்கு நேற்று காலை 5 மணியளவில் மணல் ஏற்றப்பட்ட டிராக்டர்கள் வந்துள்ளன.
சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்காக தடுப்பு போடப்பட்டிருந்த நிலையில், அதை உடைத்துக் கொண்டு டிராக்டர் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து வந்த 10-க்கும் அதிகமான டிராக்டர்கள் வரிசையாகவும் வேகமாகவும் சென்றுள்ளது.
இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் செளத்ரி கூறுகையில்,
ஒரு வாரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 51 மணல் டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவேளை அதன்காரணமாக, நேற்று சுங்கச் சாவடியில் நிற்காமல் தடுப்புகளை இடித்துக் கொண்டு டிராக்டர்கள் சென்றிருக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க | நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தோல்பூரைச் சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Uttar Pradesh: At least 12 sand-laden tractors, belonging to the sand mafia, break toll barricading and speed past, in Saiyan Police Station area in Agra on 4th September. #UttarPradesh #SandMafia #Saiyan pic.twitter.com/UqZ1ECdR2b
— AH Siddiqui (@anwar0262) September 5, 2022