பயிர்ச்சேதம்: விவசாயிகளுக்கு ரூ.192 கோடி ஒப்புதல்

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளின் பயிர்ச் சேதத்திற்கு இழப்பீடாக ரூ.192 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளின் பயிர் சேதத்திற்கு இழப்பீடாக ரூ.192 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச முதல்வர் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று செவ்வாய்க் கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில், பயிர் சேதத்தை சந்தித்த விவசாயிகளுக்காக ரூ.192.57 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பயிர் சேதத்தை தவிர்ப்பதற்காக கிடங்குகள் கட்டுதல் போன்றவை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வேளாண் துறை மூலம், உயிரி மற்றும் ரசாயன உரங்கள் மானிய விலையில் வழங்கப்படும். மேலும், பறவைகள், பூச்சிகள், முறையற்ற சேமிப்பு, போன்றவை மூலம் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. 

 2022 முதல் 2027 வரை விவசாயிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com