இந்தோ-பசிபிக் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா செல்லும் பியூஷ் கோயல்

 இந்தோ பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் நாளை லாஸ் ஏஞ்ஜல்ஸ் செல்ல உள்ளார்.
இந்தோ-பசிபிக் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா செல்லும் பியூஷ் கோயல்

இந்தோ பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் நாளை லாஸ் ஏஞ்ஜல்ஸ் செல்ல உள்ளார்.

இந்தக் கூட்டத்தில் இந்தோ-பசிபிக் வழியாக நடைபெறும் வர்த்தகம் குறித்த முக்கியமான பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன. 

இது குறித்து பியூஷ் கோயல் கூறியதாவது: “ இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நடைபெறும் வர்த்தகத்தை ஊக்குவிக்கும். அதேபோல இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளுக்கு கரோனா போன்ற கடினமான சூழல்களில் பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டமைப்பு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒற்றுமையான மற்றும் பாதுகாப்பான வர்த்தகத்தை எப்போதும் உறுதிப்படுத்தும்.” என்றார்.

இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு அமெரிக்கா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளால் பொருளாதார கூட்டமைப்பை வலிமைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு டோக்கியோவில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 14 உறுப்பு நாடுகள் உள்ளன. அவை, ஆஸ்திரேலியா, புரூனை, ஃபிஜி, இந்தியா, இந்தோனேஷியா,ஜப்பான், கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பின்ஸ்,சிங்கப்பூர், தாய்லாந்து வியட்நாம் மற்றும் அமெரிக்கா ஆகியன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com