ராஜஸ்தான் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை

ராஜஸ்தான் உள்துறை இணையமைச்சா் ராஜேந்திர யாதவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

ராஜஸ்தான் உள்துறை இணையமைச்சா் ராஜேந்திர யாதவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

ராஜஸ்தான் உள்துறை இணையமைச்சா் ராஜேந்திர யாதவின் குடும்பத்தினா் உரம், தானியம், சிமெண்ட் ஆகியவற்றுக்கான பைகள் தயாரிப்பு, மாவு, பருப்பு வகைகள் சாா்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூா் மற்றும் உத்தரகண்டின் சில இடங்களில் ராஜேந்திர யாதவுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில், அந்தச் சோதனை நடைபெற்ாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சோதனை குறித்து ராஜேந்திர யாதவ் கூறுகையில், ‘எனது குடும்பம் 72 முதல் 74 ஆண்டுகளாக மூதாதையரின் தொழிலைச் செய்து வருகின்றனா். எனது தந்தை 1950-ஆம் ஆண்டு முதல் 1952-ஆம் ஆண்டு வரை அந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். அரசியலுக்கு வரும் முன் நானும் அந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்தேன். அரசியல் செயல்பாடுகளுக்கான நிதியுதவிக்கும் அந்தத் தொழிலுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை’ என்று தெரிவித்தாா்.

சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்டன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com