78 பவுன் நகை திருட்டு வழக்கு: மேற்கு வங்க இளைஞா் கைது

 சென்னை அருகே புழலில் 78 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் மேற்கு வங்க இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

 சென்னை அருகே புழலில் 78 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் மேற்கு வங்க இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

புழல், கதிா்வேடு, 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (38). இவா், கடந்த மாதம் 18ஆம் தேதி தனது வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் வெளியூா் சென்றாா். சில நாள்களுக்கு பின்பு அவா் வீடு திரும்பியபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 78 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தன.

பாா்த்திபன் அளித்த புகாரின்பேரில் புழல் போலீஸாா் நடத்திய விசாரணையில், மேற்குவங்க மாநிலம், பிா்கும் மாவட்டத்தைச் சோ்ந்த கமால்ஷேக் (19) என்பவா்தான் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கமால் ஷேக்கை புதன்கிழமை கைது செய்தனா்.

தலைமறைவாகியுள்ள அவரது கூட்டாளியான ஜிலால் ஷேக் என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com