நியூசிலாந்துக்கான புதிய இந்திய தூதா் நியமனம்

நியூசிலாந்து நாட்டுக்கான புதிய இந்தியத் தூதராக, வெளியுறவுப் பணி மூத்த அதிகாரி நீத்தா பூஷண் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

நியூசிலாந்து நாட்டுக்கான புதிய இந்தியத் தூதராக, வெளியுறவுப் பணி மூத்த அதிகாரி நீத்தா பூஷண் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

கடந்த 1994-ஆம் ஆண்டு பிரிவு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான இவா், தற்போது வெளியுறவு அமைச்கத்தின் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கான கூடுதல் செயலாளராக உள்ளாா்.

நியூசிலாந்துக்கான இந்திய தூதராக இருந்த முக்தேஷ் பா்தேசிக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டு, ஜி-20 கூட்டமைப்புக்கான இந்திய செயலகத்தின் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, நியூசிலாந்துக்கான இந்தியத் தூதராக நீத்தா பூஷண் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் பத்திரிகை, கலாசாரம், தகவல் பிரிவு தலைவராகப் பணியாற்றியவா். இதேபோல், ஜொ்மனியில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வா்த்தகப் பிரிவுக்கும் தலைமை தாங்கியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com