முதல்வரை பதவி விலக வலியுறுத்தும் காங்கிரஸ் தலைவர்

மத்தியப் பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவர் கமல் நாத் அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகானை முதல்வர் பதவியிலிருந்து விலக சட்டப்பேரவையில் காங்கிரஸ் வலியுறுத்தும் என தெரிவித்துள்ளார்.
முதல்வரை பதவி விலக வலியுறுத்தும் காங்கிரஸ் தலைவர்

மத்தியப் பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவர் கமல் நாத் அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகானை முதல்வர் பதவியிலிருந்து விலக சட்டப்பேரவையில் காங்கிரஸ் வலியுறுத்தும் என தெரிவித்துள்ளார்.

அண்மையில், கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் மத்தியப் பிரதேசத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கும் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, காங்கிரஸ் சார்பில் மாநில முதல்வர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும், இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து மத்தியப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் கமல் நாத் கூறியதாவது: “ இந்த ஊழல் குற்றச்சாடு விவகாரத்தை நாங்கள் சட்டப்பேரவையில் முன்வைப்போம். முதல்வர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையில் ஊழல் நடந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கு பொறுப்பேற்று மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் பதவி விலக வேண்டும். ஏழைக் குழந்தைகள் பயனடையும் இந்த திட்டத்தில் ஊழல் செய்துவிட்டு முதல்வர் பதவியில் இருப்பதற்கு எந்த உரிமையும் அவருக்கு இல்லை.” என்றார்.

 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு சத்தான உணவு அளிப்பதற்கான திட்டத்தின் கீழ் மாநில அரசால் 2500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். உணவுப் பொருள்கள் கொண்டு செல்வதற்காக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்கள் இரு சக்கர வாகனங்கள், கார்களின் எண்களாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத் துறையினர் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com