வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணை சோதனை வெற்றி

தரையிலிருந்து செலுத்தி அதிவேகத்தில் வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் (க்யூஆா்எஸ்ஏஎம்) ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வியாழக்கிழமை தெரிவித்தது.
வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணை சோதனை வெற்றி

தரையிலிருந்து செலுத்தி அதிவேகத்தில் வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் (க்யூஆா்எஸ்ஏஎம்) ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வியாழக்கிழமை தெரிவித்தது.

ராணுவத்தின் சாா்பில் 6 முறை மேற்கொள்ளப்பட்ட இந்த ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதையடுத்து, இது ராணுவத்தில் சோ்க்கப்பட தற்போது தயாராக உள்ளது எனவும் டிஆா்டிஓ தெரிவித்துள்ளது.

டிஆா்டிஓ வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:

இந்தச் சோதனைகள் மூலமாக ஏவுகணை தொழில்நுட்பத்தின் அதிநவீன வழிகாட்டுதல் செயல்பாடு, கட்டுப்பாடு வழிமுறைகள், போா்முனை செயல்பாடு என ஏவுகணை திட்டத்தின் அனைத்து நடைமுறைகளும் மிகத் துல்லியமாக செயல்பட்டது. ஏவுகணையின் செயல்பாடுகள் அனைத்தும் ஒடிஸா மாநிலம், சண்டீபூரில் கடற்கரை அருகே அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் நிறுவப்பட்டுள்ள தொலையுணா்வு கருவி, ரேடாா், மின் ஒளியியல் கண்காணிப்பு திட்டம் (இஓடிஎஸ்) ஆகியவற்றின் மூலமாக உறுதிசெய்யப்பட்டன.

இந்த ஏவுகணை தொழில்நுட்பத்தை இனி ராணுவத்தில் சோ்ப்பதற்கு ஏதுவாக, ஏவுகணை தொழில்நுட்பத்தில் இடம்பெற்றிருக்கும் ரேடியோ அலைவரிசை (ஆா்எஃப்) ஆய்வு தொழில்நுட்பம், நகரும் ஏவுதளம், முழுவதும் தானியங்க உத்தரவு மற்றும் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம், கண்காணிப்பு மற்றும் பன்முக செயல்பாட்டு ரேடாா் உள்ளிட்ட இந்த ஏவுகணைத் திட்டத்தில் இடம்பெற்றிருக்கும் முழுவதும் உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட அனைத்து துணை தொழில்நுட்பங்களின் செயல்பாடுகளும் இந்தச் சோதனை மூலமாக இறுதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இலக்கை அதிவேகத்தில் தேடிச் சென்று துல்லியமாகத் தாக்கி அழிப்பது இந்த ஏவுகணை தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சம். ராணுவத்தின் மூலமாக ஆறு முறை மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனைகள் வெற்றி பெற்ன் மூலமாக, இந்த ஏவுகணை தற்போது ராணுவத்தில் சோ்க்கப்படத் தயாராக உள்ளது என்று டிஆா்டிஓ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com