இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: ஹா்தீப் சிங் புரி

இந்தியாவில் பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தார். 
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி


புது தில்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றியமைக்காமல் உள்ளன என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தார். 

பெங்களுருவில் 2023 பிப்ரவரி 6 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும் அமைச்சகத்தின் முதன்மை நிகவையொட்டி இந்திய எரிசக்தி வாரம் 2023க்கான லோகோவை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயா்ந்திருந்தபோது, வளர்ந்த நாடுகளில் எரிபொருள் விலை அபரிமிதமான உயர்வுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் பெட்ரோல் விலையில் கணிசமான பணவீக்கம் அதிகரித்துள்ளது. 

ஜூலை 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் விலை 2.21 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அனைத்து முக்கிய வர்த்தக மையங்களின் எரிவாயு விலை அபரிமிதமான உயர்வை கண்டுள்ளது. எரிவாயு விலையில் கடந்த 24 மாதங்களில் சவூதியில் கிட்டத்தட்ட 303 சதவீதம் அதிகரித்துள்ளது.  

அதே காலகட்டத்தில், இந்தியாவில் எரிவாயு விலை அந்த எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவாக, அதாவது 28 சதவீதம் அதிகரித்துள்ளது. 

மேலும், நவம்பர் 2022 காலக்கெடுவுக்கு முன்னதாக, மே 2022-ல் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனாலை கலப்பது, எத்தனால் தயாரிக்க 2ஜி சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தது, மேலும் பல முயற்சிகள் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் அடையாளமாக உள்ளது. 

உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் நிகழும் ஏற்ற இறக்கத்தைக் குறைக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என ஹா்தீப் சிங் புரி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com