
பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜு உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் காலமானார்.
திரையுலகில் கதாநாயகனாக நுழைந்து பிற்காலத்தில் வில்லனாக வலம் வந்தவர் கிருஷ்ணம் ராஜு. இவர் தெலுங்கு திரையுலகில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர், பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷியாம் படத்தில் நடித்திருந்தார்.
கிருஷ்ணம் ராஜு, தெலுங்கு திரை உலகில் "ரிபல் ஸ்டார்" என்று அழைக்கப்பட்டு வந்தார். நடிப்பிற்காக நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்த நிலையில் உடல்நலக் குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணம் ராஜு இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கள் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.