
அயோத்தி ராமர் கோயிலில் 2024 ஜனவரியில் குழந்தை ராமர் சிலை
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயலில், வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மகர சங்கராந்தி நாளில் குழந்தை ராமர் சிலை நிறுவப்படும் என்று கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை முழுமையாகக் கட்டி முடிக்க ரூ.1,800 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆண் குழந்தைக்கு அம்மாவான சௌந்தர்யா ரஜினிகாந்த் - பெயர் என்ன தெரியுமா ?
மேலும், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடையும் என்றும், கோயிலுக்குள் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மகர சங்கராந்தி நாளில் குழந்தை ராமர் சிலை நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.