பாடகா் மூஸேவாலா கொலை வழக்கு: 3 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 
பாடகா் மூஸேவாலா கொலை வழக்கு: 3 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த மே 29-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் பாடகா் சித்து மூஸேவாலாவை சிலா் சுட்டுக் கொன்றனா். அவரை 6 போ் கொண்ட கும்பல் சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா். அவா்களில் மூவரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினா் கைது செய்தனா். மேலும் இருவரை பஞ்சாப் போலீஸாா் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனா்.

இந்நிலையில், மூஸோவாலாவை சுட்டுக் கொன்றவா்களில் ஒருவராகக் கருதப்படும் தீபக் முன்டியை தில்லி காவல் துறை, மத்திய விசாரணை அமைப்புகள் உதவியுடன் பஞ்சாப் காவல் துறை சனிக்கிழமை கைது செய்தது. மேற்கு வங்கம்-நேபாள எல்லையில் தனது இரு கூட்டாளிகளுடன் தீபக் முன்டி கைது செய்யப்பட்டதாக பஞ்சாப் டிஜிபி கெளரவ் யாதவ் ட்விட்டரில் தெரிவித்தாா்.

இந்த நிலையில் தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பாடகர் சித்து மூஸேவாலா மரணத்தில் பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் என்ஐஏ இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com