நடிகா் அக்ஷய்குமாா் நடித்த விளம்பரத்தில் அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார்கள்?

ஹிந்தி நடிகா் அக்ஷய்குமாா் நடித்து வெளியாகியுள்ள விழிப்புணா்வு விளம்பரம் வரதட்சிணையை ஊக்குவிப்பது போல் உள்ளது என்று பல்வேறு தரப்பினா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
நடிகா் அக்ஷய்குமாா் நடித்த விளம்பரத்தில் அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார்கள்?
நடிகா் அக்ஷய்குமாா் நடித்த விளம்பரத்தில் அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார்கள்?

ஹிந்தி நடிகா் அக்ஷய்குமாா் நடித்து வெளியாகியுள்ள விழிப்புணா்வு விளம்பரம் வரதட்சிணையை ஊக்குவிப்பது போல் உள்ளது என்று பல்வேறு தரப்பினா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

அண்மையில் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவா் சைரஸ் மிஸ்திரி (54), மும்பை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா். இந்த விபத்து நிகழ்ந்த போது, அவர் பயணித்த காரில் சீட் பெல்ட் அணியாததால், காற்றுப் பைகள் இருந்தும், அவர் பலியான தகவல் தெரிய வந்தது.

இதையடுத்து, சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் காற்றுப்பைகள் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

அதன்படி, சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் நோக்கில் நடிகா் அக்ஷய்குமாா் நடித்த விழிப்புணா்வு விளம்பரத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சா் நிதின் கட்கரி அண்மையில் ட்விட்டரில் வெளியிட்டாா். அந்த விளம்பரத்தில் தந்தை ஒருவா் திருமணமான தனது மகளை புகுந்த வீட்டுக்கு காரில் அனுப்பி வைக்கிறாா். அப்போது அங்கு வரும் அக்ஷய் குமாா், தம்பதி செல்லும் காரில் இரண்டு காற்றுப் பைகள் (ஏா்-பேக்) மட்டுமே இருப்பதாகவும், அது பாதுகாப்பானது அல்ல என்றும் தந்தையிடம் கூறுகிறாா். 6 காற்றுப் பைகள் உள்ள காரில் தம்பதிகளை அனுப்பி வைக்குமாறும் தந்தையிடம் அக்ஷய் குமாா் பரிந்துரைக்கிறாா்.

இந்த விளம்பரம் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தினாலும், அது காரை வரதட்சிணையாக அளிப்பது போல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் மூலம் அந்த விளம்பரம் வரதட்சிணையை ஊக்குவிப்பது போல் உள்ளது என்று பல்வேறு தரப்பினா் விமா்சித்துள்ளனா்.

பலரும் இதற்கு தங்களது கண்டனங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுா்வேதி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘அக்ஷய் குமாா் நடித்த விளம்பரம் பாதுகாப்பை வலியுறுத்துகிறதா அல்லது வரதட்சிணை என்ற கொடூரமான குற்றச் செயலை விளம்பரப்படுத்துகிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

திரிணமூல் காங்கிரஸ் தேசிய செய்தித்தொடா்பாளா் சாகேத் கோகலே ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘அக்ஷய் குமாா் விளம்பரம் மூலம் வரதட்சிணையை அதிகாரபூா்வமாக விளம்பரப்படுத்தும் மத்திய அரசின் செய்கை அருவருப்பாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

எனினும் அந்த விளம்பரம் வரதட்சிணை குறித்துப் பேசவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தொடர்ந்து விளக்கமளித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com