இந்தோ-பசிபிக் முத்தரப்பு வளர்ச்சி: பிரான்ஸுக்கு ஒத்துழைப்பு -வெளியுறவுத் துறை

பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்ரின் கொலோன்னா மூன்று நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.
பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்ரின் கொலோன்னா -  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்ரின் கொலோன்னா - இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தோ-பசிபிக் முத்தரப்பு வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரான்ஸுடன் இந்தியா இணைந்து செயல்படும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் புதன்கிழமை இன்று (செப். 14) தெரிவித்துள்ளார். 

பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்ரின் கொலோன்னா மூன்று நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.

தில்லியில் அமைச்சர் கேத்ரின் கொலோன்னாவை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது, பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், உக்ரைன் விவகாரம், இந்தோ - பசிபிக் பகுதியில் நிலவும் பதற்றம், கரோனா பெருந்தொற்று, ஆப்கானிஸ்தான் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். 

மேலும், இந்தோ-பசிபிக் பகுதிகளில் முத்தரப்பு வளர்ச்சிக்கு உதவும் வகையில், பல்வேறு நலத் திட்டங்களை வகுத்து இணைந்து செயல்பட ஒப்புதல் வழங்கப்பட்டது.

உக்ரைனில் நடைபெற்று வரும் போர் பதற்றம், ஐரோப்பாவிற்கான பிரச்னை மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திற்குமான பிரச்சனை என பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்ரின் குறிப்பிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com