பஞ்சாபில் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்தில் 10 எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசியதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைக்காமல், வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதாகவும் விமர்சித்தார்.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜரிவால், பாஜகவின் 'ஆபரேஷன் தாமரை' தில்லியில் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து பாஜக தற்போது பஞ்சாபைக் குறிவைத்துள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 10 சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் பாஜக ரூ.20 கோடி பேரம் பேசியுள்ளது. முக்கியத் தலைவர்களை சந்தித்துப் பேச தலைநகரான தில்லிக்கு எம்.எல்.ஏ.க்களை அழைத்துள்ளது. அவர்கள் (பாஜகவினர்) மக்கள் வாக்குகளைப் பெறாமல், வெற்றி பெற்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கின்றனர் என்று விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுசீரமைப்பு: காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் எதிா்ப்பு

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் ‘யுனிவா்சல்’ வங்கி விண்ணப்பம் நிராகரிப்பு

பெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


