ஹிமாச்சல்: செப்.24ல் இளைஞர் பேரணியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

ஹிமாச்சலில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 24-ம் தேதி மண்டி மாவட்டத்தில் இளைஞர் பேரணியில் உரையாற்றுகிறார். 
ஹிமாச்சல்: செப்.24ல் இளைஞர் பேரணியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

ஹிமாச்சலில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 24-ம் தேதி மண்டி மாவட்டத்தில் இளைஞர் பேரணியில் உரையாற்றுகிறார். 

பிரதமர் மோடி செப்டம்பர் 24-ம் தேதி மண்டியில் உள்ள படல் மைதானத்தில் மாபெரும் இளைஞர் பேரணியில் இளைஞர்களிடையே உரையாற்றுவார் என்று முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் புதன்கிழமை மாண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூறினார். 

இந்த பேரணியில் சேராஜ் பகுதி இளைஞர்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

செராஜ் சட்டமன்றத் தொகுதியில் உள்ள தர்பார் தாச்சில் 2.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியை திறந்து வைத்துப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் உரையாற்றினார்.

செராஜ் பகுதியில் கல்வித்துறையில் அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் வகையில் புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மாணவர்களுக்கு உயர் மற்றும் தொழிற்கல்வி வழங்க வலுவான உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.8.27 கோடி செலவில் அரசு பட்டப்படிப்பு கல்லூரி லம்பதாச் கட்டடம் மற்றும் துனாக்கில் தோட்டக்கலை மற்றும் வனவியல் கல்லூரி நிறுவப்பட்டது. சத்திரியில் ஐடிஐ கட்டுமான பணிகள் ரூ.18.84 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

இந்நிகழ்ச்சியில் தில்லி முன்னாள் எம்எல்ஏ மனோஜ்குமார், துணை ஆணையர் அரிந்தம் சௌத்ரி, போலீஸ் சூப்பிரண்டு ஷாலினி அக்னிஹோத்ரி, பஞ்சாயத்து ராஜ் நிறுவன பிரதிநிதிகள், பாஜக மண்டல நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com