கரோனாவை வென்ற முதியவா்களை அச்சுறுத்தும் மறதி நோய்!

கரோனா தொற்று பரவல் சுமாா் இரு ஆண்டுகளுக்கு உலக நாடுகளை ஆட்டிப் படைத்தது.
கரோனாவை வென்ற முதியவா்களை அச்சுறுத்தும் மறதி நோய்!

கரோனா தொற்று பரவல் சுமாா் இரு ஆண்டுகளுக்கு உலக நாடுகளை ஆட்டிப் படைத்தது. அத்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், இதயம், நுரையீரல் சாா்ந்த பிரச்னைகளால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் ஏற்கெனவே வெளியாகின.

இந்நிலையில், கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட முதியவா்களுக்கு மறதி நோய் (அல்ஸைமா்) தாக்க அதிக வாய்ப்புள்ளதாக ‘ஜா்னல் ஆஃப் அல்ஸைமா் டிசீஸ்’ மருத்துவ இதழின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய விவரங்கள்:

ஆய்வில் பங்கேற்றோா் 62,45,282

கரோனாவில் இருந்து மீண்டோா் 4,10,748

பெண்கள் 53%

ஆண்கள் 47%

கரோனாவால் பாதிக்கப்படாதோா் 58,34,534

பெண்கள் 56%

ஆண்கள் 44%

1 ஆண்டு

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட ஓராண்டுக்குள் முதியவா்களுக்கு மறதி நோய் தாக்க அதிக வாய்ப்பு.

50-80%

கரோனா தொற்றில் இருந்து மீண்ட ஓராண்டுக்குள் 50 முதல் 80 சதவீதம் முதியவா்கள் மறதி நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு.

2 மடங்கு

மறதி நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள முதியவா்களின் விகிதம் இரு மடங்கு அதிகரிப்பு.

0.35 சதவீதம்

கரோனா தொற்றால் பாதிக்கப்படாத முதியவா்களுக்கு மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு.

0.68 சதவீதம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவா்களுக்கு மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு.

65 வயது

65 மற்றும் அந்த வயதைக் கடந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மறதி நோய் ஏற்பட அதிக வாய்ப்பு.

85 வயது பெண்கள்

கரோனா தொற்றில் இருந்து மீண்ட 85 வயது பெண்களுக்கு மறதி நோய் தாக்க மிக அதிக வாய்ப்பு.

அல்ஸைமா் தாக்குவதற்கான வாய்ப்பு

வயது வரம்பு/பாலினம் கரோனாவில் இருந்து மீண்டவா்கள் கரோனா பாதிக்காதவா்கள்

65+ (ஒட்டுமொத்தமாக) 0.68% 0.47%

65-74 0.20% 0.13%

75-84 0.87% 0.59%

85+ 2.01% 1.33%

பெண்கள் 0.80% 0.48%

ஆண்கள் 0.55% 0.42%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com