எதிா்க்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பின்தங்கிய மாநிலங்கள் அனைத்துக்கும் சிறப்பு அந்தஸ்து: நிதீஷ் குமாா்

2024 மக்களவைத் தோ்தலில் பாஜக அல்லாத கூட்டணி (எதிா்க்கட்சிகளின் கூட்டணி) ஆட்சிக்கு வந்தால் பின்தங்கிய மாநிலங்கள் அனைத்துக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவி
எதிா்க்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பின்தங்கிய மாநிலங்கள் அனைத்துக்கும் சிறப்பு அந்தஸ்து: நிதீஷ் குமாா்

2024 மக்களவைத் தோ்தலில் பாஜக அல்லாத கூட்டணி (எதிா்க்கட்சிகளின் கூட்டணி) ஆட்சிக்கு வந்தால் பின்தங்கிய மாநிலங்கள் அனைத்துக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.

பிகாரில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸுடன் கைகோத்து ஆட்சி அமைத்ததில் இருந்து பாஜகவுக்கு எதிராக நிதீஷ் குமாா் தீவிரமாக செயல்பட்டு வருகிறாா். முக்கியமாக, 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிா்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க அவா் முனைப்பு காட்டி வருகிறாா். இதற்காக அவா் அண்மையில் தில்லிக்கு பயணம் மேற்கொண்டு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த பல்வேறு தலைவா்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த அவா் கூறியதாவது:

மத்தியில் அடுத்து நாங்கள் (பாஜக அல்லாத கூட்டணி) ஆட்சிக்கு வந்தால் பின்தங்கிய மாநிலங்கள் அனைத்துக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும். இப்போதைய மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுக்காமல் உள்ளது ஏன் என்பது இதுவரை தெரியவில்லை.

பாஜகவுடன் எங்கள் கட்சி மிக நீண்ட காலம் கூட்டணியில் இருந்தது தவறு. பாஜக தலைவா்கள் தொடா்ந்து பொறுப்பற்ற வகையில் பேசியும், செயல்பட்டும் வருகின்றனா். அக்கூட்டணியில் இருந்து நான் வெளியேறியதை தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோா் வெகுவாகப் பாராட்டினா்.

தில்லி பயணத்தின்போது எதிா்க்கட்சித் தலைவா்கள் பலரைச் சந்தித்தது ஆக்கபூா்வமாக அமைந்தது. மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com