மத்திய அமைச்சரின் கடற்கரையோர பங்களாவை இடித்துத் தள்ள உத்தரவு; ரூ.10 லட்சம் அபராதம்

பங்களாவை இடித்துத் தள்ளவும் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அமைச்சரின் கடற்கரையோர பங்களாவை இடித்துத் தள்ள உத்தரவு
மத்திய அமைச்சரின் கடற்கரையோர பங்களாவை இடித்துத் தள்ள உத்தரவு

மும்பை: கடற்கரையோரம் விதிமுறைகளை மீறி, அனுமதிபெற்ற அளவை விட 300 சதவீதம் அதிகமாகக் கட்டப்பட்ட பங்களாவை இடித்துத் தள்ளவும் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விதிமீறிய கட்டடங்களை இடிக்க மும்பை மாநகராட்சி அவகாசம் வழங்கியும் இடிக்காததால், பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சராக உள்ள நாராயணன் ரானேவுக்குச் சொந்தமான கட்டடங்களை இரண்டு வாரங்களில் இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி மத்திய அமைச்சர் நாராயணன் ரானே கட்டிய கட்டங்களுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மும்பை கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியின்றி கட்டடங்களைக் கட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விசாரணையில், பங்களா கட்ட அனுமதிக்கப்பட்ட அளவை விட 300 சதவீதம் கூடுதலாக கட்டடங்களை கட்டியதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

விதிமீறல் கட்டடங்களை முறைப்படுத்த நாராயணன் ரானே விடுத்த முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிமன்றம், 8000 சதுர அடியில் பங்களா கட்ட அனுமதி பெற்றுவிட்டு 22 ஆயிரம் சதுர அடியில் பங்களா கட்டியதற்காக மத்திய அமைச்சருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com