முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

சாலை தடுப்பில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறிய கொடூரம்: தில்லியில் 4 பேர் பலி

தில்லியில் சாலையில் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published On :

தில்லியில் சாலையில் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் தில்லியின் சீமாபுரி பகுதியில் உள்ள பிரதான சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவர் மீது நேற்றிரவு சிலர் தூங்கியுள்ளனர்.

இந்நிலையில், நள்ளிரவு 1.51 மணியளவில் அவ்வழியே அதிவேகமாக சென்ற லாரி ஒன்று  மின் கம்பத்தில் மோதி, தடுப்புச் சுவர் மீது தூங்கிய 6 பேர் மீது ஏறியுள்ளது.

இதில், ஒரு இளைஞர் உள்பட 4 பேர் பலியான நிலையில், 16 வயது சிறுவன் உள்பட இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தில்லி போக்குவரத்து கழக பணிமனையில் அருகே விபத்தை ஏற்படுத்திய லாரி டிஎல்எஃப் நோக்கி நிற்காமல் சென்றுவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அடையாளம் தெரியாத லாரி ஓட்டுநர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைத்து தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.