/

மத்திய பிரதேசம்: பள்ளி கழிவறையை கைகளால் சுத்தம் செய்த பாஜக எம்பி

பாஜக எம்.பி., ஜனார்தன் மிஸ்ரா, பள்ளில் ஒன்றில் உள்ள கழிவறையை எவ்வித உபகரணங்களும் இல்லாமல், வெறும் கைகளால் சுத்தம் செய்தார்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 3:27 pm

DIN

பாஜக எம்.பி., ஜனார்தன் மிஸ்ரா, பள்ளில் ஒன்றில் உள்ள கழிவறையை எவ்வித உபகரணங்களும் இல்லாமல், வெறும் கைகளால் சுத்தம் செய்தார்.

மத்திய பிரதேச மாநிலம், காட்காரி கிராமத்தில் உள்ள மகளிர் பள்ளி ஒன்றில் மரம் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜக எம்.பி., ஜனார்தன் மிஸ்ரா நேற்று சென்றிருந்தார். மரம் நடும் நிகழ்ச்சிக்குப் பிறகு, பள்ளியில் உள்ள கழிவறை அசுத்தமாக இருப்பதை அவர் கண்டார். 

உடனடியாக ஒரு வாளியில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, ஜனார்தன் மிஸ்ரா தனது கைகளால் கழிவறையை சுத்தம் செய்தார். அந்த விடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

தூய்மை இந்தியா திட்டத்தின் தீவிர ஆதரவாளரான ஜனார்தன் மிஸ்ரா கடந்த 2018ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியின் கழிவறையையும் இதேபோன்று சுத்தம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.