ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளமான காளி கோயிலுக்குச் சென்றார் அமித் ஷா

பிகார் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு அடையாளமாக விளங்கும் காளி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளமான காளி கோயிலுக்குச் சென்றார் அமித் ஷா
ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளமான காளி கோயிலுக்குச் சென்றார் அமித் ஷா


கிஷண்கஞ்ச்: பிகார் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு அடையாளமாக விளங்கும் காளி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

50 சதவீத மக்கள் தொகைக்கும் அதிகமாக முஸ்லிம் மக்கள் வாழும் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் நேற்று இரவு தங்கிய அமித் ஷா, இன்று காலை, புதி காளி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில், முஸ்லிம் நவாப் அளித்த இடத்தில் கட்டப்பட்ட காளிக் கோயிலாகும்.

பிகாரில் பாஜக ஆதரவுடன் முதல்வராக இருந்த நிதீஷ் குமாா், அக்கூட்டணியில் இருந்து வெளியேறி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸுடன் கைகோத்து ஆட்சி அமைத்தாா். அதன் பிறகு பாஜகவுக்கு எதிராக நிதீஷ் குமாா் தீவிரமாக செயல்பட்டு வருகிறாா். முக்கியமாக, 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிா்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க அவா் முனைப்பு காட்டி வருகிறாா். ஆனால், பிரதமா் பதவி ஆசையில்தான் நிதீஷ் குமாா் இவ்வாறு செயல்பட்டு வருவதாக பாஜக தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில் பிகாரில் இருநாள் பயணம் மேற்கொண்டுள்ள அமித் ஷா, பாஜக எம்.பி., எம்எல்ஏக்கள், கட்சியின் பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்களைச் சந்தித்து வருகிறாா்.

புரூனியாவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அவா் பேசினார்.

அப்போது, பிகாரில் 2025-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கொள்கைகள் அற்ற ஊழல்களின் கூட்டமைப்பான தற்போதைய ஆளும் கூட்டணி தோல்வியைத் தழுவும். மக்கள் தோ்தலில் தகுந்த பதிலை அளிப்பாா்கள்.

2014 மக்களவைத் தோ்தலின்போது எந்த ஆசையில் நிதீஷ் குமாா் செயல்பட்டாரோ, அதே ஆசையில் இப்போதும் அவா் செயல்படுகிறாா். பிரதமா் பதவி மீதான ஆசையில் பாஜகவின் முதுகில் நிதீஷ் குமாா் குத்திவிட்டு, இப்போது ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் தோள்களில் அமா்ந்து சவாரி செய்து வருகிறாா். பிகாா் முதல்வா் பதவி நாற்காலி எனக்கு மட்டுமே சொந்தம் என்பது மட்டும் அவரது இப்போதைய கொள்கை.

அடுத்ததாக, தனக்கு பிரதமா் பதவிக்கான வாய்ப்பும் வரும் என்று அவா் காத்திருக்கிறாா். ஆனால், அவரது ஆசை எப்போதும் நிறைவேறாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com