ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இனி ரயில்களில் இந்த வசதியும் உண்டு..?

ரயில் நிலையங்களில் உள்ள  உணவு தயாரிப்பு நிறுவனங்கள் வாயிலாக உணவுப் பொருள்களை கொள்முதல் செய்வதற்கு மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவதற்கான புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது இந்திய ரயில்வே நிர்வாகம் .
ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இனி ரயில்களில் இந்த வசதியும் உண்டு..?


ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையிலும், டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பை இந்திய ரயில்வேயில் ஊக்கப்படுத்தும் வகையில், ரயில் நிலையங்களில் உள்ள  உணவு தயாரிப்பு நிறுவனங்கள் வாயிலாக உணவுப் பொருள்களை கொள்முதல் செய்வதற்கு மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவதற்கான புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது இந்திய ரயில்வே நிர்வாகம் .  

இதுகுறித்து இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் 8.878 இடங்களில் மின்னணு பண பரிவர்த்தனை (டிஜிட்டல் பேமெண்ட்) செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, வழங்கப்பட்ட உணவுகளின் விலையை அச்சிட்டு அளிப்பதற்கு, கையடக்க பிஓஎஸ் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

தற்போது 596 ரயில்களில் 3081  கையடக்க விற்பனை பதிவு பிஓஎஸ் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர 4,316 நிலையான உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு கையடக்க பிஓஎஸ் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இது தவிர, மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் அனைத்து விவரங்களையும் அச்சிடப்பட்ட ரசீதுகள் மற்றும் விலைப்பட்டியல்களை உருவாக்கவும், அதிக கட்டணம் வசூலிக்கும் புகார்களை நிவர்த்தி செய்யவும் உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு கையடக்க பிஓஎஸ் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ரயில்களில் பயணிகளுக்கு கிடைக்கக்கூடிய வசதிகளை விரிவுபடுத்துவதற்காக, இ- கேட்ரிங் சேவை வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

பயணிகள்   இ-டிக்கெட் மூலம் பயணச்சீட்டை முன் பதிவு செய்யும் போதே, அவர்களுக்கு தேவையான உணவு வகைகளையும் முன்பதிவு செய்யலாம் அல்லது  ரயிலில்களில் பயணம் செய்யும் பயணிகள் செயலி, சேவை மையம், இணையதளம் வசதியை பயன்படுத்தியோ அல்லது 1323 என்ற எண் மூலம் தொடர்பு கொண்டோ தங்களுக்கு தேவையான உணவு வகைகளை முன்பதிவு செய்யலாம். 

இ-கேட்ரிங் சேவை தற்போது 310 ரயில் நிலையங்களில் 1755 சேவை தாரர்கள் மற்றும் 14 உணவு நிறுவனங்கள் மூலம் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. சராசரியாக  நாள் ஒன்றுக்கு இந்த சேவைகள் மூலம் 41,844 உணவு வகைகள் வழங்கப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இ-கேட்ரிங் சேவைகளை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன்(ஐஆர்சிடிசி) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com