
புதிய இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தெரிவித்துள்ளார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்த மத்திய அரசி நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
படிக்க | பிஎஃப்ஐ அமைப்புக்குத் தடை! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
இது குறித்து ஜெய்ராம் தாக்குர் பேசியதாவது, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதனோடு தொடர்புடைய அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் பயங்கரவாத நடவடிக்கைகள் வேரறுக்கப்படுகின்றன. இதுதான் புதிய இந்தியா. இங்கு பயங்கரவாதத்திற்கு இடமில்லை எனக் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய அமைப்புகளுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) உள்பட அதனோடு தொடர்புடைய 9 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறை ஆகியவை இணைந்து கடந்த 22ஆம் தேதி சோதனைகள் மேற்கொண்டன.
படிக்க | 'இதுதான் புதிய இந்தியா'! பிஎஃப்ஐ அமைப்புக்குத் தடை -யோகி ஆதித்யநாத் கருத்து!
இந்த சோதனையின் அடிப்படையில் தமிழகம், உத்தர பிரதேசம், கா்நாடகம், குஜராத், தில்லி, மகாராஷ்டிரம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 350க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.