ஜம்மு, கர்நாடகத்துக்கு புதிய தலைமை நீதிபதி: உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை!

ஜம்மு-காஷ்மீர் மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீர் மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

ஒடிசா, ஜம்மு-காஷ்மீர் தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்யத் தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. 

நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் சஞ்சய் கிஷன் கௌல் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற கொலீஜியம் இதுதொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டதுடன், ஒடிசா, கர்நாடகா மற்றும் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாகப் பதவி உயர்வுக்கு மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களையும் பரிந்துரை செய்துள்ளது. 

ஒடிசா, கர்நாடகா மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக நீதிபதி ஜஸ்வந்த் சிங், நீதிபதி பிபி வரலே மற்றும் அலி முகமது மாக்ரே ஆகியோரின் பெயரை கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

மேலும், மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இடமாற்றம் தொடர்பாகத் தனிதனியாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com