வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சிறை தண்டனை: ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
ராகுல் காந்தி
Updated On :20 ஏப்ரல் 2023, 11:53 am

DIN

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மோடியின் சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதனைத் தொடர்ந்து, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். மேலும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும்வரை குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், சூரத் நீதிமன்றத்தில் தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை சூரத் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.