
தில்லி சாகேத் நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை தில்லி சாகேத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் உடையில் வந்த நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. படுகாயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு காவல் துறையினர் விரைந்து வந்தனர். காவல் துறை விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குற்றப் பிண்ணனி கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.