அக்ஷய திருதியை: திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடல்!

அட்சய திருதியை முன்னிட்டு பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடினார்கள். 
அக்ஷய திருதியை: திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடல்!

அட்சய திருதியை முன்னிட்டு பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடினார்கள். 

அட்சய திருதியை நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் மற்றும் ஜைனர்களால் கொண்டாடப்படும் மிகவும் புனிதமான நாள்களில் ஒன்றாகும். இந்த நாள் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. 

அட்ச திருதியை பிரார்த்தனை, தானம், ஆன்மிகம் ஆகியவற்றுக்கு மட்டுமல்லாமல், புதிய தொழில் தொடங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும், ரியல் எஸ்டேட் வாங்குவதற்கும் இந்த நாள் மிகவும் அதிர்ஷ்டமான நாளாகப் பார்க்கப்படுகிறது. 

சமஸ்கிருதத்தில் அக்ஷயா என்ற சொல்லுக்கு எப்போதும் குறைவில்லாதது என்று பொருள். இந்நாளில் தொடங்கும் காரியங்கள் எந்தவித தடையுமின்றி விரிவடையும் என்றும், இந்நாளில் நற்செயல்கள் செய்வது நித்திய வெற்றியையும் அதிர்ஷ்டத்தையும் தரும் என்பது ஐதீகம்.

இந்த நாளில் முன்னோர்களுக்கு திதி, சிரார்த்தம் போன்றவை செய்வது வழக்கம். எனவே, முக்கூடல் சங்கமமான திரிவேணி சங்கமத்தில் இன்று பக்தர்கள் பலர் கூடி புனித நீராடி மகிழ்ந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com