
திருப்பதி தேவஸ்தானம் பெயரில் இயங்கிவந்த போலி இணையதளம் அடையாளம் காணப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம், இணையதள பக்கத்தின் வடிவமைப்பை இந்த மாதம் புதிதாக மாற்றியுள்ளது. இதைப் பயன்படுத்திக்கொண்டு, பழைய இணைய தள வடிவிலேயே போலி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் பெயரில் இயங்கிவந்த போலி இணையதளம் அடையாளம் காணப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
தேவஸ்தானம் அளித்த புகாரில் இதுவரை 41 இணையதளங்கள் அடையாளம் காணப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.