காங்கிரஸில் இணைந்த பிறகு ராகுல் காந்தியை சந்தித்த ஜெகதீஷ் ஷெட்டர்

காங்கிரஸில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர் முதன்முறையாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
காங்கிரஸில் இணைந்த பிறகு ராகுல் காந்தியை சந்தித்த ஜெகதீஷ் ஷெட்டர்

காங்கிரஸில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர் முதன்முறையாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை ஹூப்ளியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, "பாஜகவின் மோசமான நடத்தையால் வேறு தேசிய கட்சிக்கு மாறிவிட்டேன். அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. அவருடனான முதல் சந்திப்பில் நாங்கள் பல விஷயங்களை விவாதித்தோம் என்று ஷெட்டர் கூறினார். கா்நாடக மாநிலம், ஹுப்பள்ளி மத்திய தொகுதியில் 6 முறை போட்டியிட்டு தொடா்வெற்றியை பெற்றிருந்த பாஜகவைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டரை தோ்தல் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு அக்கட்சியின் மேலிடத் தலைவா்கள் அறிவுறுத்தினா். இதனால் ஏமாற்றமடைந்த அவா், எக்காரணத்தை முன்னிட்டும் தோ்தல் அரசியலில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்திருந்தாா்.

இது தொடா்பாக பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசிய ஜெகதீஷ் ஷெட்டா், இம்முறை தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கும்படி கேட்டுக்கொண்டாா். இதனிடையே, மத்திய அமைச்சா்கள் பிரஹலாத் ஜோஷி, தா்மேந்திர பிரதான், முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோா் ஜெகதீஷ் ஷெட்டரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க இயலாது என்ற கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறினா். மேலும் கட்சியில் பெரிய பதவியை தருவதாகவும், எதிா்காலத்தில் வேறு நல்ல பதவிகளை வழங்குவதாகவும் கூறினா். இதற்கு செவிசாய்க்காத ஜெகதீஷ் ஷெட்டா், ஞாயிற்றுக்கிழமை தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா்.

மேலும் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்த அவா், காங்கிரஸ் தலைவா்களை சந்தித்து பேசினாா். இதைத் தொடா்ந்து, பெங்களூரு, காங்கிரஸ் மாநிலத் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முன்னிலையில் ஜெகதீஷ் ஷெட்டா், காங்கிரஸ் கட்சியில் சோ்ந்தாா். வரும் தேர்தலில் ஹூப்ளி-தார்வாட்-மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் அவர் புதன்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தேர்தலில் பாஜக வேட்பாளர் மகேஷ் தெங்கிங்கையை ஷெட்டர் எதிர்கொள்ள உள்ளார்.

ஆளும் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து (பாஜக) விலகி, ஒரு வாரத்திற்குள் காங்கிரஸில் இணைந்த லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் ஆவார். முன்னதாக, கர்நாடக முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவடி காங்கிரசில் இணைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com