கோப்புப்படம்
கோப்புப்படம்

சுயபடம் எடுக்க முயன்றபோது ஹெலிகாப்டர் இறக்கை தாக்கியதில் அரசு அதிகாரி பலி 

கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் அருகே சுயபடம் எடுக்க முயன்றபோது அதன் இறக்கை தாக்கியதில் அரசு அதிகாரி பலியானார்.
Published on

கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் அருகே சுயபடம் எடுக்க முயன்றபோது அதன் இறக்கை தாக்கியதில் அரசு அதிகாரி பலியானார்.

உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் தாமில் உள்ள ஹெலிபேடு தளத்தில் இருந்த ஹெலிகாப்டர் அருகே சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரி அமித் சைனி இன்று சுயபடம் எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாரவிதமாக அவர் ஹெலிகாப்டரின் டெயில் ரோட்டர் பிளேட்டின் எல்லைக்குள் சென்றுவிட்டார். 

இந்த நிலையில் சைனி மீது ஹெலிகாப்டர் இறக்கை தாக்கியதில் அவருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் கேதார்நாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 25 ஆம் தேதி திறக்கப்படவுள்ள இமயமலை கோயிலுக்கு ஹெலி சேவைகளுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக ஹெலிபேடை பார்வையிட்ட சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணைய குழுவில் சைனி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com