சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவி எண்ணை அறிவித்தது ம.பி. அரசு!

வன்முறையால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் உதவிக்காக மத்தியப் பிரதேச அரசு உதவி எண்ணை அறிவித்துள்ளது. 
சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவி எண்ணை அறிவித்தது ம.பி. அரசு!

வன்முறையால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் உதவிக்காக மத்தியப் பிரதேச அரசு உதவி எண்ணை அறிவித்துள்ளது. 

சூடானில் சிக்கியுள்ள மத்தியப் பிரதேசம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த குடிமக்களுக்கு உதவ மத்தியப் பிரதேச அரசு முதல்வர் ஹெல்ப்லைனைத் தொடங்கியுள்ளது. சூடானில் சிக்கித் தவிக்கும் மாநில மற்றும் வெளி மாநில குடிமக்கள் ஹெல்ப்லைன் எண்ணை (+917552555582) தொடர்பு கொள்ளலாம் என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. 

சூடானில் சிக்கலை எதிர்கொள்ளும் மத்தியப் பிரதேசத்தில் வசிப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முதல்வரின் ஹெல்ப்லைன் 181ஐ அழைக்கலாம். தங்கள் பிரச்னைகளைப் (www.cmhelpline.mp.gov.in) என்ற முதல்வர் ஹெல்ப்லைன் போர்ட்டலில் சென்று புகாரளிக்கலாம். 

கடந்த சனிக்கிழமையன்று தலைநகர் கர்டோமில் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த சண்டையில் இந்தியா் உள்பட இதுவரை 400 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com