கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது உணவகம் ஒன்றில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தோசை ஊற்றும் காணொலி வைரலாகி வருகின்றது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற மே 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரு கட்சிகளின் தேசிய தலைவர்களும் கர்நாடகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மைசூரில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி, அங்குள்ள உணவகத்தில் தோசை ஊற்றிய காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
மேலும், அந்த உணவகத்தில் உணவு சாப்பிட்ட பிரியங்கா காந்தி, அங்கிருந்த குழந்தைகளுடன் உரையாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.