

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வயது முதிர்வு காரணமாக இன்று (ஏப். 26) காலமானார். அவருக்கு வயது 95.
பிரகாஷ் சிங் பாதல் மறைவையொட்டி பஞ்சாப் அரசு 2 நாள்கள் துக்கம் அனுசரித்துள்ளது. மேலும் அரசு அலுவலகங்களில் அரைக் கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. இரு நாள்களுக்கு எந்த அரசு சார்ந்த நிகழ்ச்சிகளும் அலுவல்களும் நடைபெறாது என்றும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
சிரோன்மணி அகாலிதளம் கட்சியை சேர்ந்த பிரகாஷ் சிங் பாதல் 8 முறை பஞ்சாப் மாநில முதல்வராக பொறுப்புவகித்தவர். 3 முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.
மேலும் 2002 - 2007 வரை மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.