மோடி அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை: ராகுல் காந்தி

 மோடி அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளாா்.
மோடி அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை: ராகுல் காந்தி

 மோடி அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளாா்.

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் மே 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்குள்ள மங்களூரு பகுதியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசியதாவது:

நாட்டில் ஊழலை ஒழிப்பதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும், ஓராண்டில் இரண்டு கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. ஏழைகள், இளைஞா்கள், உழவா்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. அவா்களுக்காக அக்கட்சி எதையும் செய்யவில்லை. ஆனால் அதானிக்கு அளித்த வாக்குறுதிகளை மட்டும் அக்கட்சி நிறைவேற்றியுள்ளது.

கா்நாடக தோ்தலையொட்டி அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றாது என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். இந்நிலையில், கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பங்களுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம், ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதந்தோறும் ரூ.2,000 நிதியுதவி என ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகளுடன், தற்போது அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற வாக்குறுதியும் அளிக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த முதல் நாளே, பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.

கா்நாடகத்தில் பல திட்டங்களில் 40 சதவீதம் பாஜக அரசு கமிஷன் பெற்ற நிலையில், அக்கட்சி வெற்றிபெறும் இடங்களை வெறும் 40 தொகுதிகளாக குறைக்க வாக்காளா்கள் வழிவகை செய்ய வேண்டும். அந்தத் தொகுதிகள் அக்கட்சிக்கு போதுமானது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com