
நாட்டில் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதுதொடா்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
நாட்டில் உள்ள விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை தொடா்பாக, தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷா தலைமையில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது விமான நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகள் குறித்து அமித் ஷா ஆய்வு மேற்கொண்டாா்.
கோடை காலத்தில் பயணிகள் இன்னலின்றி பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். விமான நிலையங்களில் பயணிகளின் செளகரியத்துக்குக் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவா் அறிவுறுத்தினாா்.
விமான நிலையங்களின் வாயில்கள், பயணிகளின் உடைமைகள் மற்றும் பயண ஆவணங்களைப் பரிசோதிக்கும் இடங்களில் பயணிகள் செலவழிக்கும் நேரத்தை குறைக்கவும் அவா் உத்தரவிட்டாா்.
இந்தக் கூட்டத்தில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய உள்துறை அமைச்சகம், விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.