நெல்லூரில் ஏடிஎம் இயந்திரத்தில் தீ விபத்து; உயிர் சேதம் இல்லை

நெல்லூர் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று வங்கியின் தானியங்கி பணப்பரிவர்த்தனை இயந்திரம் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று வங்கியின் தானியங்கி பணப்பரிவர்த்தனை இயந்திரம் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ பற்றிய தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர், மேலும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.

மின்தடை காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும், அதன் பிறகு சேத மதிப்பு உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையில், ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஃபைபர் படகுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 40 படகுகள் எரிந்து நாசமாகின.

பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டோம். தீயில் 40 படகுகள் எரிந்து நாசமானது, என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com