லூதியானாவில் தொழிற்சாலையில் வாயு கசிவு: 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் பலி

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலை ஒன்றில் வாயு கசிந்ததில் 5 பெண்கள் உள்பட 11 பேர் பலியாகியுள்ளனர். பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லூதியானாவில் தொழிற்சாலையில் வாயு கசிவு: 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் பலி

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலை ஒன்றில் வாயு கசிந்ததில் 5 பெண்கள் உள்பட 11 பேர் பலியாகியுள்ளனர். பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம், லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 2 சிறுவர்கள், 5 பெண்கள் உள்பட 11 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் பலர் மயக்கமாக காணப்பட்ட நிலையில் மருத்துவமனையில் லூதியானா பொது மருத்துவமனையிலும், லூதியானாவில் உள்ள சத்குரு பிரதாப் சிங் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள், காவலர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதி என்பதால் அங்கிருந்த மக்களை உடனடியாக அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து துணை ஆணையர் சுர்பி மாலிக் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொழிற்சாலையில் இருந்து வாயு கசிந்ததால் 11 பேர் பலியாகி உள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாயு கசிவுக்கான உண்மையான காரணம் தெரியவில்லை. தொழிற்சாலையில் இருந்து கசிந்த வாயு எத்தகைய வாயு என்பதை கண்டறிவதற்காக மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்படுகின்றன. 

மேலும், அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், சண்டிகரில் உள்ள பஞ்சாப் ராஜ் பவனில் நடைபெற்ற மன் கி பாத் நிகழ்ச்சியின் 100 ஆவது நிகழ்ச்சி சிறப்புக் காட்சியில் உரையாற்றும் போது, லூதியானாவில் வாயு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். 

லூதியானா சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் வேதனை தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஒரு ட்வீட்டில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com