அறிவியல் அருங்காட்சியகங்கள் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும்: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்

அறிவியல் அருங்காட்சியகங்கள், இளைஞர்களின் விஞ்ஞான மனநிலையைக் கூர்மைப்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கம் உதவும் என மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
அறிவியல் அருங்காட்சியகங்கள் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும்: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்
Published on
Updated on
1 min read


லண்டன்: அறிவியல் அருங்காட்சியகங்கள், இளைஞர்களின் விஞ்ஞான மனநிலையைக் கூர்மைப்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கம் உதவும் என மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

6 நாள் பயணமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயர்மட்டக் குழுவுடன் இங்கிலாந்து சென்றுள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஞாயிற்றுக்கிழமை 175 ஆண்டுகள் பழமையான லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். பின்னர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இதுபோன்று  அறிவியல் அருங்காட்சியகங்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

மேலும், இது போன்ற அருங்காட்சியகங்களை அமைப்பதன் மூலம், இளைஞர்களின் அறிவியல் ஆர்வம் தூண்டப்படுகிறது.  சாதாரண குடிமக்கள் குறிப்பாக இளைஞர்களுக்குள் மறைந்திருக்கும் திறன்களை உணரவும், உள்ளார்ந்த திறன்களைக் கண்டறியவும், விஞ்ஞான மனநிலையைக் கூர்மைப்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் உதவுகின்றன என தெரிவித்தார்.

பின்னர், அங்கு அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்று பாதிப்பு மற்றும் தடுப்பூசி தொடர்பான அரங்கத்துக்கு சென்று அவர் பார்வையிட்டார். உலகின் முக்கிய உயிரி அறிவியல் பொருளாதாரமாக இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாகவும்,  இரண்டே ஆண்டுகளில் இந்தியா நான்கு தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது. 

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை “மிஷன் கோவிட் சுரக்‌ஷா”என்ற இயக்கத்தின் மூலம் நான்கு தடுப்பூசிகளை வழங்கியுள்ளது, கோவாக்சின் உற்பத்தியைப் பெருக்கியுள்ளது மற்றும் எதிர்கால தடுப்பூசிகளின் சுமூகமான வளர்ச்சிக்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இன்னும் பல தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

உலக அளவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள இந்திய தடுப்பூசி சந்தை மதிப்பு 2025-க்குள் ரூ.25 ஆயிரத்து 200 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வெற்றிகரமான தடுப்பூசி முயற்சிகளில் இந்தியாவின் அனுபவத்தை ஜிதேந்திர சிங் பகிர்ந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com