மத்திய பல்கலைக்கழகங்களில் 4% பேராசிரியர்கள் மட்டுமே ஓபிசி பிரிவினர்!

நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 4 சதவிகிதம் பேராசிரியர்கள் மட்டுமே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை(ஓபிசி) சேர்ந்தவர்கள் பணிபுரிகிறார்கள்.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 4 சதவிகிதம் பேராசிரியர்கள் மட்டுமே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை(ஓபிசி) சேர்ந்தவர்கள் பணிபுரிகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத்தொடரில், ஆந்திராவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சந்தீவ் குமார், மத்திய பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்களின் எண்ணிக்கையை பிரிவு வாரியாக கேட்டிருந்தார்.

இந்த கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஸ் சர்கர் அளித்துள்ளார்.

அதில், மத்திய பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்களில் 85 சதவிகிதம் பேரும், இணை பேராசிரியர்களின் 82 சதவிகிதம் பேரும் பொதுப் பிரிவினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஓபிசி பிரிவை சேர்ந்த 60 பேராசிரியர்களும், எஸ்.சி. பிரிவை சேர்ந்த 96 பேராசிரியர்களும் பணிபுரிவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரிவு வாரியாக..

 பொதுஎஸ்.சி.எஸ்.டி.ஓ.பி.சி.ஈ.டபள்யூ.எஸ்.பி.டபள்யூ.டி.மொத்தம்
பேராசிரியர்கள்1,1469622603141,341
இணை பேராசிரியர்கள்2,304231691877192,817
துணை பேராசிரியர்கள்8,7341,4216251,90119222513,098

பட்டியல் சமூகத்தை சேர்ந்த பேராசிரியர்கள், இணை பேராசிரியர்களின் எண்ணிக்கையைவிட ஓபிசி பிரிவுனரின் எண்ணிக்கை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com