தில்லி காய்கறி சந்தையை திடீர் விசிட் அடித்த ராகுல்! 

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் உள்ள அசாத்பூர் சந்தைக்கு நேரடியாக சென்று அங்கு மக்களோடு மக்களாக வலம் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தில்லி காய்கறி சந்தையை திடீர் விசிட் அடித்த ராகுல்! 

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் உள்ள அசாத்பூர் சந்தைக்கு நேரடியாக சென்று அங்கு மக்களோடு மக்களாக வலம் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஆசியாவில் மிகப்பெரிய காய்கறி மொத்த விற்பனை சந்தை வடக்கு தில்லியில் இயங்கி வருகின்றது. இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு திடீரென அங்குள்ள சந்தைக்குச் சென்று மக்களோடு மக்களாக சாதாரணமாக நின்றார். 

இதை கண்ட வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து ஆர்வமாக அவரிடம் பேசினர். ராகுல் மக்களிடம் கனிவுடன் பேசியதோடு, காய்கறி, பழங்களின் விலைகள் பற்றி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். 

சமீப காலமாக தக்காளி விலை அதிகரித்துள்ளதையடுத்து, பல இடங்களில் ஒரு கிலோ  ரூ.200-ஐ கடந்துள்ளது. இத்தகைய சூழலில் தக்காளி விலை உயர்வு அதனால் ஏற்படும் பாதிப்பு பற்றி அறியும் நோக்கத்தில் ராகுல் காந்தி ஆசாத்பூர் சந்தைக்கு வந்தார். 

முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக இரண்டு நாள் பயணமாக கேரளத்துக்குச் சென்று திரும்பிய ராகுல் ஆசாத்பூர் சந்தைக்கு வருகை தந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com