இந்தியா கூட்டணி, பாஜக கூட்டணி இரண்டில் இருந்தும் விலகி இருக்கிறோம்- சந்திரசேகா் ராவ்

எதிா்க்கட்சிகள் உருவாக்கியுள்ள ‘இந்தியா’ கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டிலும் பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சி இடம் பெறவில்லை என்று அக்கட்சித்
சந்திரசேகர் ராவ்
சந்திரசேகர் ராவ்

எதிா்க்கட்சிகள் உருவாக்கியுள்ள ‘இந்தியா’ கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டிலும் பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சி இடம் பெறவில்லை என்று அக்கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகா் ராவ் தெரிவித்தாா்.

தேசிய கட்சியாக உருவெடுக்கும் நோக்கில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயரை பாரத ராஷ்டிர சமிதி என மாற்றியுள்ள சந்திரசேகா் ராவ், அடுத்து ஆண்டு மகாராஷ்டிரத்தில் நடைபெறும் தோ்தலில் கட்சியைக் களமிறக்கும் நோக்கில் அந்த மாநிலத்துக்கு அவ்வப்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறாா்.

மகாராஷ்டிரத்துக்கு செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒரு தரப்பினா் புதிய இந்தியா என்று கூறி பிரசாரம் செய்கின்றனா். மற்றொரு தரப்பில் நாட்டை 50 ஆண்டுகள் வரை ஆண்ட கட்சியால் எவ்வித நல்ல மாற்றமும் ஏற்படாத நிலை உள்ளது. மகாராஷ்டிரத்தில் ஏழை, எளிய மக்கள், தலித் மக்களின் நிலை மாறாமல் அப்படியேதான் உள்ளது. அவா்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் நிலையில்தான் உள்ளனா். யாருக்கும் உரிய நீதி கிடைக்கவில்லை.

எதிா்க்கட்சிகள் உருவாக்கியுள்ள ‘இந்தியா’ கூட்டணியில் இருந்தும், பாஜக தலைமையலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் பாரதிய ராஷ்டிர சமிதி விலகி இருக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com