ஹரியாணா கலவரம்: குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்படுவர்!

ஹரியாணா மாநிலத்தில் கலவரத்துக்கு காரணமான குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் எனவும் அம்மாநில முதல்வர் மனோஹர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
ஹரியாணா கலவரம்: குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்படுவர்!
Published on
Updated on
1 min read

ஹரியாணா மாநிலத்தில் கலவரத்துக்கு காரணமான குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் எனவும் அம்மாநில முதல்வர் மனோஹர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். 

ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 

விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊா்வலத்துக்கு சிலா் எதிா்ப்பு தெரிவித்து நிகழ்த்திய கல்வீச்சு கலவரமாக வெடித்தது. நூ மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை, குருகிராமின் சோனா நகருக்கும் பரவிய நிலையில், அங்கு பிரிவு-57 பகுதியில் அமைந்துள்ள அஞ்சுமான் மசூதிக்குள் நள்ளிரவில் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்தவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பின்னா் மசூதிக்கு தீ வைத்துள்ளனா்.

நூ மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில் குா்சேவாக் கிராமத்தைச் சோ்ந்த நீரஜ் மற்றும் பதாஸ் கிராமத்தைச் சோ்ந்த சக்தி ஆகிய இரு ஊா்க்காவல் படை வீரா்கள் உள்பட 6  பேர் உயிரிழந்தனா். 116 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மனோஹர் லால் கட்டார், நூ கலவரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்பமுடியாது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்கும்.   

எதிர்பாராதவிதமாக நேர்ந்த இந்த கலவத்தில் 4 பொதுமக்கள் உள்பட இரண்டு ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com