உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி: மல்லிகார்ஜுன கார்கே
ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.


ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மூலம் ஜனநாயகம் வென்றுள்ளது. உண்மை மட்டுமே வெல்லும், உச்சநீதிமன்ற தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். அரசியலமைப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது, பாஜகவின் சதி முற்றிலும் அம்பலமானது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. நீதி உயிர்ப்புடன் இருப்பதற்கு இன்றைய தீர்ப்பு ஒரு சாட்சி. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றார்.
இதனிடையே ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மக்களவை சபாநாயகருக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார். அதில், ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதை மேற்கோள்காட்டி உள்ளார். மேலும் ராகுலுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட துக்ளக் லேன் இல்லத்தை மீண்டும் ஒதுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி சூரத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதனடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
மேலும் எதன் அடிப்படையில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது என்பது குறித்து கீழமை நீதிமன்றங்கள் விளக்கமளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தொண்டர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவின் மூலமாக ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எம்.பி. பதவியில் தொடர்வார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...