பிசிசிஐ செலுத்தியவருமான வரி ரூ.1,159 கோடி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2021-22 நிதியாண்டில் ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்தியுள்ளது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இது 37 சதவீதம் அதிகமாகும்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2021-22 நிதியாண்டில் ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்தியுள்ளது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இது 37 சதவீதம் அதிகமாகும்.

இது தொடா்பான கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

பிசிசிஐ 2021-22 நிதியாண்டில் ரூ.1,159 கோடியை வருமான வரியாக செலுத்தியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 37 சதவீதம் அதிகமாகும். 2021-22-இல் பிசிசிஐ ரூ.7,606 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. செலவுகள் ரூ.3,064 கோடியாக இருந்துள்ளது. இதுவே அதற்கு முந்தைய ஆண்டு வரவுகள் ரூ.4,735 கோடியாகவும், செலவுகள் ரூ.3,080 கோடியாகவும் இருந்துள்ளன.

2020-21-இல் ரூ.844.92 கோடி, 2019-20-இல் ரூ.882.29 கோடி, 2018-19-இல் ரூ.815.08 கோடி, 2017-18-இல் ரூ.596.63 கோடியை பிசிசிஐ வருமான வரியாக செலுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com